மகாபாரதம்:
———————
- குந்தி தேவி சூரியனை தோத்திரம் செய்து கர்ணனை பெற்றாள்
- குந்தி தேவியும், மாத்திரியும் தேவர்களை தோத்திரம் செய்து ஐந்து பிள்ளைகளை பெற்றனர்
- திரெளபதிக்கு ஐவரும் புருசர்கள் ஆனார்கள்.
- கௌரவர்கள் நூறு பேர். அவர்கள் பிறந்த விதம்.
இவைகள் உலகியல் அறிவுக்கு பொருந்துமா? என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாகாபாரதம் ஊர் உண்மை ஞான பொருளின் தத்துவ கதையாகும். உண்மையாக நடந்தது அல்ல என்பது ஞானிகளின் கருத்தாகும்.
பஞ்ச பாண்டவர்கள்:
➖➖➖➖➖➖➖➖
தருமா சிந்தனை உள்ளவர்கள் ஐம்பூதத்தால் ஆன மனித தேகத்தின் கண் உள்ள ஐம்புலன்கள் ஞானேந்திரியங்கள் ஆன்ம உணர்வுள்ளவர்கள் பஞ்ச பாண்டவர்களாகும்.
திரெளபதி
➖➖➖➖
மனித தேகத்தை காக்கும் இரத்தமாகிய சக்தி, பெண் அம்சம் (குங்குமம்) என்பதாகும். இச்சக்தியைக் கொண்டு ஐம்புலன்கள் செயல்படுவதால் ஐவருக்கு பத்தினி என்ற தத்துவ கருத்தாகும்.
கண்ணன்:
➖➖➖➖
ஆன்ம அறிவு மாயன், தேர் ஓட்டி, பாண்டவர்களின் மைத்துனன், உலக உயிர்களாகிய தேர்களை வழி நடத்துபவன் என்ற தத்துவமாகும்.
துரியோதனன்:
➖➖➖➖➖
நான், எனது என்ற அகங்கார மமகாரங்களின் உருவம், அஞ்ஞானத்திற்கு அதிபதி. அறிவுக்கும், நீதிக்கும் ஊசிமுனையிடமும் கொடுக்க மறுத்தவன்.
சகுனி:
➖➖➖
கெளரவர்களின் மைத்துனன், தீவினைகளுக்கு வழிகாட்டும் வஞ்சக அமைச்சர்.
கருத்து நம் மானிட தேகத்தின்கண் அறிவுக்கும், அறியாமைக்கும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும், நீதிக்கும், அநீதிக்கும், புண்ணியம், பாவம் என்ற எண்ணங்களாகிய இருவினை போர் வீர்களுக்கு இடையில் நாள் தோறும் நடக்கும் மனப்போராட்டமே பாரத போராகும். இப்போர் மானிடன் என்ற ஒருவன் இருக்கும் வரை மனதிற்கும் அறிவிற்கும் ஓயாது நடக்கின்ற போராகும்.