சைவ வழிபாடு
சைவ சமயத்தில் கடவுள் வழிபாடும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன.வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்ட நமது விதிகள் மூன்று மூலங்களைக் கொண்டு அமைக்கப்படுவது.
- பதி (கடவுள்)
- பசு (உயிர்)
- பாசம் (பற்று)
இவற்றில் பதிக்கு பாசத்தால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை.அதுபோல பாசம் பதியை தொழுது பயன்களை பெற்றுக்கொள்ள முடியாது
இவை இரண்டிற்கும் இடைப்பட்ட பசுவே இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு
அதாவது பசுவாகிய உயிர் பாசமாகிய பற்றில் இருந்து விடுபட்டு பதியாகிய கடவுளை(சிவனை) அடைவதே வழிபாட்டின் நோக்கம்
அப்படி உயிர் கடவுளை அடையும் நிலையே “ஞானம்” எனப்படுகிறது
சைவ நெறியின் சிவ வழிபாட்டின் நோக்கம் ஞானத்தை பெறுவதே
“பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” என்ற சிவ புராணத்தின் வரிகள் சிவ வழிபாட்டின் நோக்கத்தை நமக்கு விளக்குகின்றது
எனவே இந்த உலக இன்பதுன்ப உறவுகளில் இருந்து நம்மை விடுவித்து கொண்டு சிவ வழிபாட்டின் மூலம் சிவ கதி அடையவே நாம் முயல வேண்டும்….