திருநீற்றை ஒரு விரலால் தொட்டு நெற்றியில் பொட்டு போல வைத்துக்கொள்ள கூடாது. அதுபோல தண்ணீர் விட்டு குழைத்தும் பூசக் கூடாது.

நெற்றியில் ஒரு கோடிடுபவர்கள் ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் எவ்வளவு திருநீறு எடுக்க முடிகிறதோ அவ்வளவு எடுத்து நெற்றியில் கோடிட வேண்டும்.

மூன்று கோடு இடுவதற்கு சுண்டு விரல் தவிர்த்து மீதி நான்கு விரல்களால் திருநீரை எடுத்து, பெருவிரல் இல்லாமல் மீதி மூன்று விரலால் நெற்றி முழுவதும் கோடக அணிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தீட்சை பெற்றவர்கள் மட்டுமே திருநீரை தண்ணீர் சேர்த்து குழைத்து அணியலாம். தீட்சை பெறாதவர்கள் கண்டிப்பாக திருநீரை தண்ணீரில் குழைத்து அணிய கூடாது.

தினமும் திருநீறு அணியும் போது

“நம் தேகமும் ஒருநாள் இந்த பிடி சம்பலாகத்தான் ஆக போகிறது, ஆகவே இந்த உலக வாழ்வில் அதிக ஆசை கொள்ளாது, பொன் பொருள் மீது ஆசை கொள்ளாது, இறை வழிபாட்டில் மனம் ஒன்றி, ஆன்மா வளம் பெற வாழவேண்டும்.”

என்று எண்ணிக்கொள்ள வேண்டும். இதுவே சைவ மதம் போதிக்கும் சிறந்த கோட்பாடாகும்.

சைவ வழிபாடு
சைவ சமயத்தில் கடவுள் வழிபாடும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன.வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்ட நமது விதிகள் மூன்று மூலங்களைக் கொண்டு அமைக்கப்படுவது.

  1. பதி (கடவுள்)
  2. பசு (உயிர்)
  3. பாசம் (பற்று)

இவற்றில் பதிக்கு பாசத்தால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை.அதுபோல பாசம் பதியை தொழுது பயன்களை பெற்றுக்கொள்ள முடியாது

இவை இரண்டிற்கும் இடைப்பட்ட பசுவே இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு

அதாவது பசுவாகிய உயிர் பாசமாகிய பற்றில் இருந்து விடுபட்டு பதியாகிய கடவுளை(சிவனை) அடைவதே வழிபாட்டின் நோக்கம்

அப்படி உயிர் கடவுளை அடையும் நிலையே “ஞானம்” எனப்படுகிறது

சைவ நெறியின் சிவ வழிபாட்டின் நோக்கம் ஞானத்தை பெறுவதே

“பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” என்ற சிவ புராணத்தின் வரிகள் சிவ வழிபாட்டின் நோக்கத்தை நமக்கு விளக்குகின்றது

எனவே இந்த உலக இன்பதுன்ப உறவுகளில் இருந்து நம்மை விடுவித்து கொண்டு சிவ வழிபாட்டின் மூலம் சிவ கதி அடையவே நாம் முயல வேண்டும்….

பிரதோஷம்: அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள்.

தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம்.சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த மகாபிரதோஷம்.

தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது.

பதினொரு பிரதோஷங்கள் தரிசனம் செய்தல் ஒரு முழு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலன் கிடைக்கும். பாவமே செய்து கொண்டு பிரதோஷம் செய்வதால் ஒரு புண்ணியமில்லை.

பிரதோஷ நேரம் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னும் ஒன் அரை (1-1/2) மணி நேரம் மணிநேரம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது